Saturday, April 26, 2008

இடம்

மகன் கம்ப்யூட்டர் இஞ்சீனியர்
இடம் அமெரிக்கா
மகள் டாக்டர்
இடம் லண்டன்
பெருமையுடன் தாய்
இடம் முதியோர் இல்லம்

நினைப்பு

தாயத்து கட்டினால்

லட்சங்கள் கிடைக்கும்

அவன் நினைப்பு

விற்றால்

அடுத்த வேளை சோறு

தாயத்து கிழவியின் நினைப்பு

முதல் எழுத்து

நீண்ட நாட்களாக தமிழ் ப்ளோக் எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். இப்போது தான் சாத்தியம் ஆனது. நல்ல படைப்புக்கள் தருவேன் என்று நம்புகின்றேன்.