Thursday, October 6, 2011

நாற்பதை கடந்து



கஷ்டங்கள் மறந்து வாழ்ந்ததை பார்த்திருக்கீறேன்
குணங்கள் மறந்து வாழ்ந்ததை பார்த்ததில்லை

பொறுமை கொண்டு பார்த்திருக்கீறேன்
கோபம் கொண்டு பார்த்ததில்லை

நீங்கள் கடினமாய் உழைத்து பார்த்திருக்கீறேன்
உழைப்பை கடினமாய் நீங்கள் பார்த்ததில்லை

தோல்விகளை மறந்து பார்த்திருக்கீறேன்
(உதவிய) தோள்களை மறந்து பார்த்ததில்லை

ஆக்கங்களை பேசி பார்த்திருக்கீறேன்
ஆகாததை பேசி பார்த்ததில்லை

நேசம் செய்து பார்த்திருக்கீறேன்
மோசம் செய்து பார்த்ததில்லை

நாற்பதில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கும்
என்பார்கள்
இனிதாய் ஆரம்பிக்கட்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Saturday, October 3, 2009

நிறைவேற்றியிருப்பேன்

அம்மா, பட்டுப்பாவடை கட்டிக்கொண்டு உனக்கு
அர்ச்சனை தட்டு தூக்கி வந்து உதவிருப்பேன்

பள்ளி முடிந்து வந்து உன் வீட்டு வேலை சுமையை
நானும் உடன் சுமந்துயிருப்பேன்

உனக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது அப்பாவுக்கு
உணவு காய்ச்சி கொடுத்துயிருப்பேன்

கல்லூரியில் முதலாய் வந்து உன்னை
மேடை ஏற்றி கோப்பை வாங்கியிருப்பேன்

வேலைக்கு சென்று அப்பாவின் கடனை
நானும் கொஞ்சம் அடைத்துயிருப்பேன்

இத்தனையும் நிறைவேற்றி இருப்பேன் நீ
கள்ளிப்பால் கலக்காமல் இருந்திருந்தால்

Wednesday, June 11, 2008

காதலர் தினம்

கண்களில் வித்திட்டு
இதயத்தை அறுவடை செய்யும்
காதல் விவசாயிகளின்
அறுவடை திருநாள்

Tuesday, June 10, 2008

நான் கடவுள்

நானும் கடவுளும் ஒன்று தான்

சோதனை காலங்களில் வேண்டப்படுகிறோம்

சோதனை முடிந்த பின் மறக்கப்படுகிறோம்

இப்படிக்கு ராணுவ வீரன்

Thursday, May 1, 2008

உன் பிரிவால்

மனது சொல்லியது என்னுள் நீ பார்த்து கொள் என்று
கண்கள் கேட்கவில்லை
மனது சொல்லியது என்னுள் நீ கேட்டு கொள் என்று
செவிகள் கேட்கவில்லை
மனது சொல்லியது என்னுள் நீ உணர்ந்து கொள் என்று
நெஞ்சம் கேட்கவில்லை
தேற்றிய மனது கலங்கி நின்றது
மனது கேட்காமல்

Saturday, April 26, 2008

இடம்

மகன் கம்ப்யூட்டர் இஞ்சீனியர்
இடம் அமெரிக்கா
மகள் டாக்டர்
இடம் லண்டன்
பெருமையுடன் தாய்
இடம் முதியோர் இல்லம்

நினைப்பு

தாயத்து கட்டினால்

லட்சங்கள் கிடைக்கும்

அவன் நினைப்பு

விற்றால்

அடுத்த வேளை சோறு

தாயத்து கிழவியின் நினைப்பு